தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் ஊரின் கழிவுநீர் செல்வதற்கு அமைத்த வடிகால்கள் செங்கல் சூளைகள் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போன நிலையில், ரூ.36 லட்சம் செலவில் தாமிரபரணி ஆற்றிற்கு ஓடை ஏற்படுத்தி ஷட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த ஷட்டர் வழியாக ஊருக்குள் தண்ணீர் புகுவதால் அந்த பகுதி பொதுமக்கள் திரண்டுவந்து மறியலில் ஈடுபட்டனர்.









