பிரான்சில் உள்ள டஸால்ட் ஏசியேசன் நிறுவனத்திலிருந்து ரபேல் விமானம் வாங்குவதற்கு இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. முதல் விமானத்தை நாளை வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
அதை வாங்குவதற்காகவும், பிரான்சில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரான்ஸ் புறப்பட்டார்.
பாரிஸிலிருந்து 590 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெரிக்னாவில் நடக்கும் ரபேல் விமான ஒப்படைப்பு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங்குடன் பிரான்ஸ் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ப்ளோரண்ட்ஸ் பார்லியும் கலந்துகொள்கிறார். அப்போது விமானத்துக்கு இருவரும் இணைந்து ஆயுத பூஜை கொண்டாடவுள்ளனர்.
மேலும், விமானத்தில் பின் இருக்கையில் இருந்து பறக்கவும் ராஜ்நாத்சிங் திட்டமிட்டுள்ளார்.