நெல்லை தாழையூத்து பண்டாரகுளம் இசக்கியம்மன் கோவில் அருகே ஒரே பைக்கில் வந்த 4 வாலிபர்கள் எதிரே வந்த லோடு வாகனத்தில் மோதியதில் பைக்கில் வந்த மேல தாழையூத்து காமீலா நகரை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் தங்கராஜா(வயது 40) தலையில் பலத்த காயமடைந்து உயிழந்தார்.பைக்கில் வந்த மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
அப்போது அவ்வழியே காரில் வந்த நெல்லை சட்ட மன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது காரை நிறுத்தி ஆம்புலன்சை வரவழைத்து காயமடைந்தவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் காயமடைந்த தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு கிராமத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் முத்துக்குமார் (30),கருங்குளத்தை சேர்ந்த சொரிமுத்து மகன் அருள்,திருமலை மகன் தங்கமுத்துக்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்