மகனை வெட்டிக் கொன்ற தந்தை: தூத்துக்குடி கோர்ட் அருகே பயங்கரம்

0
430

தூத்துக்குடி நீதிமன்றம் அருகே காசி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் தந்தையே அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்அழகன் (55). இவர் இன்று காலை தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக தனது சகோதரர் கடல் ராஜா, சகோதரனின் மகன் காசி துரை ஆகியோருடன் ஆஜராக வந்துள்ளார்.

அப்போது தமிழ் அழகனை அவரது மகன் காசிராஜன் (36) அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இது அவர் காயமடைந்த நிலையிலும் மகனிடம் இருந்த அரிவாளை பிடுங்கி சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.

தகவலறிந்த மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயங்களுடன் இருந்த தமிழழகனை கைது செய்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஏற்கனவே தந்தையை காசிராஜன் மகன் இரண்டு முறை கொலை செய்ய முயன்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here