பணகுடி அருகே வீர பாண்டி கிராமத்தில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். இங்கு அவர்களுக்கு என்று சிறிய சிஎஸ்ஐ ஆலயம் உள்ளது. தற்போது அருகிலே கொஞ்சம் நிலம் வாங்கி பெரிய ஆலயம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை திடீரென ஊரைச் சேர்ந்த சிலர் சிஎஸ்ஐ ஆலயக் கதவை இழுத்து பூட்டினார்கள். இது குறித்து கிறிஸ்தவர்கள் பணகுடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பொதுமக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஒரு சாரார் வராததால் சமாதான பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.