நாசரேத் பகுதியில் கடந்த ஒரு வாரம் காலமாக பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .இதுகுறித்து மின்சார துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்றும் பகலில் சில மணி நேர மின்வெட்டை சந்தித்தனர். ஆனால் இது குறித்து போன் போட்டால் மின் ஊழியர் யாரும் எடுப்பதில்லை.இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் இந்த அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே தலையிட்டு மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடுசெய்ய வேண்டும் என நாசரேத் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்







