கற்குவேல் அய்யனார் கோவிலில் பூசாரிகள் வெளியேற்றம் – நீதிமன்றம் உத்தரவு

0
1627

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஆனது மிகவும் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் உள்ள பூசாரிகள் கடந்த 2003ஆம் ஆண்டு கோவிலில் தங்களுக்கும் உரிமை உண்டு என கூறி திருச்செந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் பேரில் பூசாரிகளுக்கு உரிமை கிடையாது என தீர்ப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டமாக வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது கோவிலில் உள்ள பூசாரிகளுக்கு உரிமை கிடையாது என இறுதி தீர்ப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத பூசாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here