சாத்தான்குளம் தேரிக்காட்டில் சினிமா படப்பிடிப்பு

0
3945

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இயக்குனர் பிரபு ஜெயராம் என்பவர் ஏற்கனவே “என்னங்க சார் உங்க சட்டம்” என்ற படத்தை இயக்கிய இயக்குனர் திரையுலகில் அறிமுகமானார். இதற்கு முன்பு அவர் பல்வேறு குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் தற்போது தமிழக விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதியின் சகோதரர் அருள்நிதியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதற்காக அப்பகுதியில் பட்டாசு ஆலை போன்ற தோற்றமளித்த செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்தது.

தொடர்ந்து சாலைப்புதூர் பகுதியில் உள்ள தேரிக்காடு என அழைக்கப்படும் “சிகப்பு பாலைவனம்” பகுதியில் அப்படத்தின் படப்பிடிப்பு உயரமான மலை குன்றில் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர் இங்குபல்வேறு காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது.

மேலும் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம், உவரி கப்பல் மாதா ஆலயம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு பகுதியில் நடந்து வருவதால் அந்தப் பகுதி முழுவதும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here