கோவில்பட்டி அருகே பெண்ஊழியரை காவல் வைத்து தூய்மை பணியாளரிடம் சல்லாபத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர் கைது

0
924

தூத்தக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தலில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருவத்துவராக பணியாற்றி வருபவர் குருசாமி (51). மேலும் அவர் இளையரசனேந்தலில் தனியாக ஸ்ரீ முத்தையா கிளினிக் என்ற பெயரிலும் மருத்துவமனை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றும் தூய்மை பணியாளர் ஒருவருடன் பணிநேரத்தில் அடிக்கடி நெருக்கமாக ஒன்றாக இருந்து வருவதாகவும், அந்த நேரத்தில் சிகிச்சை பெற வரக்கூடிய நோயாளிகள் அறைக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்று வரும் நீலவேணி என்பவரை வாசல் வெளியில் பாதுகாப்புக்கு நிற்க வைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பணி நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளருடன் மருத்துவர் குருசாமி நெருக்கமாக ஒன்றாக இருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் நீலவேணி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மருத்துவர் குருசாமி மீது புகார் அளித்துள்ளார்.

தனது புகாரில் மருத்துவரும், தற்காலிக பணியாளராக பணியாற்றும் தூய்மை பணியாளருடன் இருப்பதை தான் பார்த்து விட்டதால், தன்னை பழிவாங்கும் விதமாக தினந்தோறும் இருவரும் உள்ளே சென்றதும், அறைக்குள் யாரூம் செல்லமால் இருக்கும் வகையில் தன்னை பாதுகாவலுக்கு நிறுத்தி வைத்து மன உளைச்சளை ஏற்படுத்தி வருவதாகவும், மேலும் அவர்கள் இருவரும் இருக்கும் வீடியோ தான் எடுத்துவிட்டேன் என்று கூறி தனது செல்போனையும் திருடி வைத்து விட்டதாகவும், தனக்கு விடுமுறை கூட கொடுக்கமால் வேண்டும் என்றே தன்னை பல்வேறு வகையில் துன்புறுத்தி வருவதாகவும், தான் அவருக்கு அடி பணிய வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு

மறுக்கவே தன்னை அவதிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பணி நேரத்தில் மருத்துவபணியாளர்கள் அருகே படுத்து உறங்குவதுபோன்ற பல இன்னல்களை கொடுத்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

நீலவேணியின் புகாரை பெற்று கொண்ட போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மருத்துவர் குருசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here