தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியை சேர்ந்த எட்வின் சகாயராஜ் (42) என்பவர் பேரிச்சம்பழம், நன்னாரி உள்ளிட்ட பொருட்களை ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று மாலை அவர் திருச்செந்தூரில் இருந்து திரும்பி நங்கைமொழி தனியார் பள்ளி அருகே வந்த போது திடீரென எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க திரும்ப முயற்சித்த போது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து மெய்ஞானபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.










