விளாத்திகுளம் அருகே கொரோனாவை மறக்கடித்த மீன்பிடி திருவிழா

0
476

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ விளாத்திகுளம் கிராமத்தில் உள்ள பொது கண்மாயில் தண்ணீர் நிரம்பியதும் கிராம மக்கள் சார்பில் மீன் குஞ்சுகளை வாங்கி விடுவது வழக்கம், அவ்வாறு விடப்பட்ட மீன் குஞ்சுகளை பிடிக்க ஆடி திருவிழா ஆண்டுதோறும் அக்கிராமத்தில் நடைபெற்று வருகிறது


அந்த வகையில் கடந்த மழைகாலங்களில் அக்கிராமத்தில் உள்ள கண்மாய் முழுமையாக நிரம்பியது. இதனை தொடர்ந்து அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊர் கண்மாயில் மீன் குஞ்சுகளை வாங்கி விட்டனர்..தற்போது ஆடி மாதம் ஆகிய நிலையில் அக்கிராம மக்கள் ஆடித்திருவிழாவாக பொதுக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது. இதில் அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து ஆர்வமுடன் மீன்பிடித்திருவிழாவை கொண்டாடினர்.


கடந்த சில வருடங்களாக தண்ணீர் இல்லாததால் மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் கண்மாயில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனால் இந்த ஆண்டு மீன்பிடித் திருவிழா நடத்தி உள்ளனர்.

அக்கிராம மக்கள் தங்களது கைகளில் உள்ள கூடை, சிறியவகை வலைக்கூடுகள் உள்ளிட்டவைகளை கொண்டு மீன் பிடித்தனர். இதில் கலந்து கொண்ட மக்களுக்கு உளுவை, கெண்டை, கட்லா உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை பொதுமக்கள் பிடித்து சென்றனர். ஒரு சிலருக்கு 3 முதல் 10 கிலோ வரை எடை கொண்ட மீன் பிடிபட்டதால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். கிராம மக்களின் ஒற்றுமைக்காக ஆண்டுதோறும் இந்த மீன் பிடி திருவிழாவை அந்த கிராம மக்கள் ஒருங்கிணைந்து நடத்துகின்றனர்.

ஒற்றுமைக்காக திருவிழா நடைபெற்றாலும் தற்போது கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அவ்விதி காற்றில் கரைந்து போனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here