தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாநாடு சாத்தான்குளத்தில் எஸ்ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு புறநகர் மாவட்ட தலைவர் ஜான் ராஜா தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் தர்மராஜா, வடக்கு மாவட்ட தலைவர் லிங்க குமார், மத்திய மாவட்ட தலைவர் பொன் ராஜ் சிவா, கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்டீபன், மேற்கு மாவட்ட தலைவர் தங்கமணி முன்னிலை வகித்தனர். புறநகர் மாவட்ட செயலர் சங்கர் வரவேற்றார் முன்னதாக சங்க கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
லயன்ஸ் கிளப் கவர்னர் ஜே.கே.ஆர் முருகன், தமிழக வெற்றிக்கழக மாநில துணைப் பொதுச் செயலர் சுபத்ரா முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். கூட்டத்தில் தென் மண்டல தலைவர் கோடீஸ்வரன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி மோசஸ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் விஜயகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி கலந்து கொண்டு வியாபாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்வதற்கும், ஏழை மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சங்க நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் முரளி சங்கர்,பால குரு, தங்கராஜ்,மாநில இணைச் செயலர்கள் அகமது சாஹிப், சேர்மராஜ், ராஜேஷ்குமார், கிருஷ்ணராஜ், மாநில செய்தி தொடர்பாளர் ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலர் ராஜ்குமார், இளைஞர் அணி இணைச் செயலர் முத்துகிருஷ்ணன் சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக செயலர்கள் அச்சம்பாடு சௌந்தரபாண்டி, அப்பாத்துரை, நகர அதிமுக செயலர் குமரகுருபரன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலர்
பால மேனன்,மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் முரசொலி மாறன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கெங்கை ஆதித்தன், அருண்குமார், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.












