தூத்துக்குடி காரப்பேட்டைநாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், காவல்துறையின் மூலம் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். பள்ளிப்படிப்பை தொடரும்போது பல்வேறு இடர்கள் வரும், அவற்றை நீக்கி நம் எதிர்காலத்தை நோக்கி பயணித்து இலக்கை அடைவதையே குறிக்கோளாக வைக்க வேண்டும் என பேசினார்.









