மூதாட்டி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் உத்தரவு

0
690

மூதாட்டி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபருக்கு- 30 ஆண்டு ஜெயில், ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 02.02.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 65 வயது மூதாட்டி ஒருவரை வழிமறித்து தங்க கம்மலை வழிப்பறி செய்து பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலை வழக்கில் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் (எ) தர்மமுனீஸ்வரன் (35) என்பவரை கைது செய்தனர். . இவ்வழக்கை அப்போதைய எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது புலன் விசாரணை நடத்தி கடந்த 01.07.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு.மாதவ ராமானுஜம் இன்று (06.08.2024) குற்றவாளியான மாவீரன் (எ) தர்மமுனீஸ்வரன் என்பவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி ஆயுள் தண்டனை ரூபாய் 1000/- அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 376(A) பிரிவின்படி 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை ரூபாய் 1000/- அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 392 r/w 397 பிரிவின்படி 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை ரூபாய் 1000/- அபராதமும் விதித்து மேற்படி சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here