நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடந்த வாரம் உச்சத்தை எட்டியது. நாள் ஒன்றுக்கு 700 முதல் 850 பேர் வரை பாதிக்கப்பட்டோர் பட்டியல் சென்றது.
ஆனால் இன்று கொரோனா தொற்று உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் முதல் முறையாக 1107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் படி மாநகர் பகுதியில் 388 பேருக்கும் , அம்பாசமுத்திரம் பகுதியில் 121 பேருக்கும் , மானூர் பகுதியில் 75 பேருக்கும் ,நாங்குநேரி பகுதியில் 85 பேருக்கும் ,பாளையங்கோட்டையில் 117 பேருக்கும், பாப்பாக்குடியில் 23 பேருக்கும் , ராதாபுரம் பகுதியில் 71 பேருக்கும், வள்ளியூரில் 111 பேருக்கும், சேரன்மகாதேவியில் 45 பேருக்கும், களக்காட்டில் 71 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.








