வரும் 27ஆம் தேதி நெல்லை மாநகராட்சி முற்றுகை – தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

0
348

நெல்லையில், தாமிரபரணி பாதுகாப்பு இயக்க கலந்தாய்வு கூட்டம், தலைவரும் சுற்றுச்சூழல் அறிஞருமான அருணாசலம் தலைமையில், பொதுச்செயலாளர் இதழாளர் அய்கோ முன்னிலையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் மகேஷ் வரவேற்றார்.

இதில், ஆலோசகர் வியனரசு, அருட்தந்தையர்கள் பிரான்சிஸ் சேவியர், பெஞ்சமின், மைபா, அருட்சகோதரி அருள்மேரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வழக்கறிஞர்கள் பிரபு ஜீவன், கொம்பையா, பேச்சிமுத்து மற்றும் பவானி வேல்முருகன், நெல்சன், ஆதிராநாயணன் ஆகியோர் தாமிரபரணியில் மாசு, மணல் கொள்ளை பற்றி பேசினர்.

இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், முன்னாள் செயற்குழு உறுப்பினர் லூர்துராஜ், ரெங்கநாதன், உடன்குடி குணசீலன், இசக்கிமுத்து, பால் அண்ணாத்துரை, ஜெயராஜ் ஆசிரியர், மருதூர் மணிமாறன், அருள்ராஜ், புரட்சி வேந்தர், ஜெயகோபால், டேனி, சிலுவை பிரகாசம், வி.பி. கணேஷ், கார்த்திக் நாராயணன், பிச்சுமணி, திருநாவுக்கரசு, நம்பிராஜன், கண்ணன், துரை, அருணகிரி, பொன்ராணி, ஜெசிந்தா, டோரா, சங்கீதா, இசபெல்லா, பார்வதி, ஜெயராணி, செல்வராணி, உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வழக்கறிஞர் அப்துல் நிஜாம் நன்றி கூறினார்.

கூட்டத்தில், பாதாளச்சாக்கடை திட்டத்தை சுமார் 20 ஆண்டுகாலம் நிறைவேற்றாமல் குடிநீரில் சாக்கடையை கலக்கும் குற்றச்செயலை கண்டித்து வரும் 27ஆம்தேதி நெல்லை மாநகராட்சியை தாமிரபரணி ஆற்று நீர் புட்டிகள் ஏந்தி முற்றுகையிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here