படிப்புக்கு பெற்றோர் தடை: மாணவி தற்கொலை

0
1004

உடன்குடி அருகே சாதரக்கோன்விளையை சேர்ந்தவர் சிவன். இவர் மாட்டுவண்டி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மகள் மகராசி (வயது 17). இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். படிப்பு, விளையாட்டில் சிறந்து விளங்கிய மகராசி கல்லூரி படிப்பு படிக்க ஆசைபட்டுள்ளார். ஆனால் பெற்றோர் படிக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகராசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது தொடர்பாக விசராணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here