நடுச்சாமத்தில் கவர்னர் ஜகா வாங்கிய காரணம்

0
460

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அலுவலக செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து முதலமைச்சர் அலுவலகத்துக்கும் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்,செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற ரிட் மனு மீதான விசாரணையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதை தான் விரும்பவில்லை ‘என்று கருத்தை மட்டுமே ஆளுநர் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் தெளிவான உத்தரவு பிறப்பித்திருந்தால் தான் பதவி நீக்க கோரும் ரிட் மனுவை விசாரிக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதனை மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொண்ட ஆளுநர் ரவி, வருகிற ஜுலை 7ஆம் தேதி விசாரணையின் போது, தனது உத்தரவின் அடிப்படையில் உயர்நீதிமன்றமும் பதவி நீக்க உத்தரவு பிறப்பித்து விடுமென்று கருதி டிஸ்மிஸ் உத்தரவை துணிச்சலாக பிறப்பித்தார்.

ஆனால், இதே வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம், இந்திய அரசியல் சட்டப்பிரிவு 164ன் படி ஆளுநருக்கு முதலமைச்சர் அறிவுரைப்படி அமைச்சர்களை நியமிக்க முடியும் என்று தெரிவித்திருந்தாலும், அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் குறித்து எதுவும் கருத்து கூறவில்லை என்பதால் ஆளுநர் கொஞ்சம் தயங்கினார்.

அதுமட்டுமின்றி, ,ஆளுநரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோமென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேறு அறிவித்து விட்டதால், சட்ட சிக்கலுக்கு அஞ்சிய ஆளுநர் நேற்று நள்ளிரவில் செந்தில் பாலாஜி இன் டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்தி வைப்பதாக கூறி ஜகா வாங்கினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தண்டனை பெற்று தருவதில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் , செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆர்வமாக உள்ளனர்உள்ளனர்.

இதனடிப்படையில் யோசித்தால், ஜுலை 7 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரும் மனுக்கள் மீதான விசாரணை எந்த திசையில் செல்லும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here