கிருஷ்ணர் போன்று புல்லாங்குழல் ஊதினால் பசு அதிகமாக பால் கொடுக்கும் என அசாம் பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
அசாம் மாநிலம் பா.ஜனதா சில்சார் எம்.எல்.ஏ. திலிப் குமார் பால் அங்கு கலாச்சார நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ‘இசை மற்றும் நடனம் ஆகியவை நேர்மறையான தாக்கங்கள் ஏற்படுத்துகிறது. கிருஷ்ணர் ஆடிக்கொண்டு புல்லாங்குழல் ஊதியதை கேட்டால் பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
அவர் மேற்கோள் காட்டிய ஆராய்ச்சி குறித்து கேள்வி எழுப்பியபோது திலிப் குமார் பேசுகையில், குஜராத்தை தளமாக கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. அதில் புல்லாங்குழல் இசைக்கும் பால் விளைச்சல் அதிகரிப்புக்கு இடையேயான தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.















