கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவு துறை பதிவாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார்
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்தின் இடமாற்றம் மாற்றம் பற்றிய முந்தைய அறிவிப்பும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலாளர் இறையன்புவின் இந்த உத்தரவின் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாகவே உணரப்படுகிறது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மாவட்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன்,கீதா ஜீவன் ஆகியோருடன் மாவட்ட வளர்ச்சி பணிகள்,அரசின் திட்டங்கள் செயல்பாட்டில் மிகவும் இணக்கமான சூழ்நிலை நிலவுவதால் மீண்டும் கி.செந்தில்ராஜ் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக தொடர்வார் என்றே தெரிகிறது









