அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி – சாத்தான்குளம் வாலிபர் கைது

0
850

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காலனி தெருவை சேர்ந்த திரவியம் மகன் முத்தையா (30) என்பவரிடம் சாத்தான்குளம் ஆர்.சி வடக்கு தெருவை சேர்ந்த வீரமணி மகன் சுடலைமுத்து (48) என்பவர் அறிமுகமாகி தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூபாய் 2,50,000/-ம், அதேபோன்று சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரிடம் ரூபாய் 6 லட்சமும், சுயம்பு என்பவரிடம் ரூபாய் 6 லட்சமும், சுபாஷ் என்பவரிடம் ரூபாய் 1,50,000/-ம் என மொத்தம் ரூபாய் 16 லட்சம் பணத்தை வங்கி கணக்கு மூலமாகவும் மற்றும் ரொக்கமாகவும் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து முத்தையா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து, மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் . அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் . சண்முகசுந்தரம், . ராஜ்குமார், . மோகன்ஜோதி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு சுடலைமுத்துவை இன்று கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here