அறந்தாங்கி அருகே 1.5 கிலோ கஞ்சாவுடன் அதிமுக பெண் பிரமுகர் உட்பட 5 பேர் கைது

0
1342

புதுக்கோட்டை மாவட்டம்

அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடி கிராம பகுதியில் செல்லும் வழியில் உள்ள பொற்குடையார் கோவில் அருகே சுமார் 11/2 கிலோ கஞ்சாவை வேறு ஒருவருக்கு கைமாற்றி கொடுக்கச் சென்ற பொழுது சகுந்தலா(33)
அதிமுக பிரமுகர் பிடிப்பட்டார்.


அவருடன் மதன் என்றமதன்குமார்(30) மணிகண்டன்(26) முருகன்(24) மணிமாறன்(19) ஆகிய 5 பேரும் ஒன்றரை கிலோ கஞ்சாவை வேறு ஒருவருக்கு கொடுக்க சென்று கொண்டிருக்கையில் அறந்தாங்கி காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மூக்குடி சாலையில் உள்ள பொற்குடையார் கோவில் அருகே
காவல்உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தண்டபாணி, காவலர்கள் முத்துக்குமார்,ரமேஷ், சத்யா அடங்கிய காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடும் போது பறிமுதல் செய்ததோடு 5 நபரையும் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here