கிராம சாவடியை ஆக்கிரமித்து கோயில் கட்டி வசூல்: கலெக்டரிடம் புகார்

0
168

மதுரை அருகே தேனூரில் கிராமம் சாவடியை ஆக்கிரமித்து கோயில் கட்டி வசூலில் ஈடுபடுவதாக தனி நபர் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரிடம் கிராம முக்கியஸ்தர் முத்துநாயகம் தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சோணை முத்து மற்றும் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
தேனூர் கிராமத்தில் உள்ள கிராம சாவடியை ஆக்கிரமித்து, நெடுஞ்செழியன் பாண்டியன் என்பவர் கோயிலைக் கட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார்.
இது தொடர்பாக, அறநிலையத் துறை, காவல்துறையிடம் கிராம மக்கள் சார்பில் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆடசியர் கிராம சாவடி ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here