ஜெயலலிதா மரணத்தில் பல மர்மம் _ சசிகலா உறவினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

0
1018

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

அதில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்ய டாக்டர் சமீன் சர்மா பரிந்துரைத்ததாகவும் அதை செய்திருந்தால் அவர் பிழைத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே கூறியதை திரித்து கூறிய டாக்டர் பாபு ஆபிரகாம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ஆம் தேதி மரணமடைந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி பிற்பகல் 3 50 க்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது என்றும் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சுமுக உறவு இல்லை.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வு சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவக் குழு ஐந்து முறை அப்பல்லோவுக்கு வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.

சசிகலா அவரது உறவினர் டாக்டர் சிவகுமார் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரையும் விசாரிக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி ஓபிஎஸ்-க்கு முழுவதுமாக தெரியும் என்றும் பரிந்துரை தெளிவுபடுத்தியுள்ளது. இதேபோல் சசிகலாவின் உறவினர் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here