திருநெல்வேலி கரிசல் பட்டியை சேர்ந்த பிரபாகரன் ஜெபாஸ்டின் வேதியல் பட்டதாரி. நெல்லை சிபிஎல் காலனியில் வசித்து வரும் இவர் தற்போது சவூதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இவருக்கும் மதுரையை சேர்ந்த திவ்யாவுக்கும் கடந்த 2009ல் திருமணம் நடந்தது. பிரபாகரனுக்கு கடந்த 2011ல் சவூதியில் வேலை கிடைத்தது. 2017ல் திருநெல்வேலியில் வாங்கிய நிலத்தில் அவர் வீடு கட்ட முயற்சித்த போது, பின் வீட்டில் வசித்த பாளை. தனியார் கல்லூரி பேராசிரியை ஷீலாவின் கணவர் மோசஸ் ராஜாசிங் என்பவர் கட்டுமான வேலைக்கு உதவ முன்வந்தார். இவர் கிறிஸ்தவ சமய பாஸ்டர்.
நாளடைவில் பிரபாகரன் ஜெபஸ்டின் குடும்பத்தில் நெருக்கம் காட்டிய பாஸ்டர்் ராஜாசிங், அவர் வெளிநாட்டுக்கு சென்றதை பயன்படுத்தி திவ்யாவுடன் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டார். அது மட்டுமின்றி, திவ்யாவும் அவரும் சேர்ந்து, பிரபாகரன் ஜெபாஸ்டினின் 180 சவரன் நகை, ரூ.61லட்சம் ரூபாய், இரு சக்கர, 4 சக்கர வாகனம் மற்றும் வீட்டு பொருட்களை மோசடியாக ஏமாற்றி எடுத்துக் கொண்டதாக ஜெபாஸ்டின் பிரபாகரன் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்யாததையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்து உத்தரவு பெற்றார்.
அந்த உத்தரவின் அடிப்படையில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் இபிகோ 418, 420, 294 (பி), 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் மோசஸ் ராஜாசிங், திவ்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.









