தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பல்வேறு வருட போராட்டங்களுக்கு பின்பு அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரும் அதை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சி நடந்து வந்த நிலையில், தற்போது சாத்தான்குளம் அரசு காவலர் குடியிருப்பில் உள்ளது. சாத்தான்குளம், தட்டார்மடம், நாசரேத், மெய்ஞானபுரம் உள்ளிட்ட நான்கு காவல் நிலையங்களுக்கு தலைமை மகளிர் காவல் நிலையமாக இது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இரு அறைகளே இருப்பதால், இன்று புகார் அளிக்க வந்த பெண்கள் அமர காவல் நிலைய திண்ணையில் கூட இடம் போதாமல் இருந்ததால் வெளியே,, தரையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே, போதிய இடவசதியுடன் காவல் நிலையத்தை விசாலமாக அமைக்க வேண்டும் என்று புகார்தாரர்கள் புகார் தெரிவித்தனர்.











