1999 ஜூலை 23 அன்று கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் சம்பள உயர்வு கேட்டு திருநெல்வேலியில் ஊர்வலமாக சென்ற மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு வயது குழந்தை விக்னேஷ் உட்பட 17 நபர்கள் இறந்தனர்.
இந்த நிகழ்வின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23 அன்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பாக தாமிரபரணி நதியில் மலர் தூவி இறந்து போன 17 மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், குழந்தை விக்னேஷிற்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இன்று நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் திமுக, அதிமுக தவிர அனைத்து அமைப்பினரும் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.








