அசாம் மாநிலம், சர்க்கார் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்நாத் (வயது 25). இவர் மதுரை ஹோட்டலில் தண்ணீர் சப்ளை செய்பவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஓம்நாத் சம்பவத்தன்று இரவு காமராஜர் சாலை, பங்கஜம் காலணிக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், சிகரெட் தரும்படி கேட்டனர். அதற்கு ஓமநாத் மறுத்தார். எனவே ஆத்திரம் அடைந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.
இது தொடர்பாக ஓம்நாத், தெப்பக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நியூ பங்கஜம் காலனி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 2 சிறுவர்களை கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய புதுராமநாதபுரம் ரோடு, தமிழன் தெரு விஷ்வமுருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதே போல் சிகரெட் தகராறிlல பார் ஊழியரை கத்தியால் குத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கோரிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 63). இவர் ஜம்புராபுரம் மார்க்கெட்டில் உள்ள பார் ஒன்றில், சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று நள்ளிரவு பாரில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர், சிகரெட் புகைத்துள்ளார். இதற்கு பாஸ்கரன் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே ஆத்திரம் அடைந்த 2 பேர் கும்பல், கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றது.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோரிப்பாளையம், நடுத்தெரு ரகுமான் (வயது 25), பாலம் ஸ்டேஷன் ரோடு, ரஹீம் ராஜா மகன் முகமது முஷாரப் கான் (வயது 19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.













