கோவில்பட்டியில் ஊரக வேலை சம்பளம் வழங்க ஆர்ப்பாட்டம்

0
384

கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 2024 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் வழங்கவும். இந்த சம்பளத்தை நம்பி இருக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்ததை சரி செய்யவும் மற்றும் உடனடியாக சம்பளத்தை வழங்க கோரி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது

இதில் பங்கேற்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பி மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் முன்னிலை வகித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here