அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்: அமைச்சர்கள் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

0
584

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 311 பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் இருக்கும் அவரது உ ருவச் சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் செய்தித் துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here