நெல்லை மாவட்டம். கூடன்குளம் ஊராட்சி பகுதி இயற்கையாகவே ஒரு மழை மறைவு பிரதேசமாகும். கால்வாய் பாசனமும் இங்கு போதிய அளவில் இல்லை, இதன் சுற்று வட்டார கால்வாய் பாசனங்களான பேச்சிச்பாறை, கோதையாறு, நம்பியாறு, அனுமன் நதி, தாமிரபரணி ஆகிய கால்வாய்களின் கடை மடையாக கூடன்குளம் ஊராட்சி அமைந்துள்ளதால் இங்குள்ள குளங்கள் நிரப்பப்படுவதேயில்லை.
கூட்டுக் குடிநீர் திட்ட நீரும் பகுதியினருக்கு முறையாக கிடைப்பதில்லை.
இக்காரணங்களால் கூடன்குளம் ஊராட்சி வரலாறு கானாத குடிநீர் பஞ்சத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில்,
கூடன்குளம் ஊராட்சியில் ஒரு வர் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தினசரி பல லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி
தனியார் நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றார்.
இதனால், கூடன்குளம் ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய… ஊராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட போர்வெல் கிணறுகள் தூர்ந்ந்து போகும் அபாயத்தில் உள்ளன.
தனியார் நீர் விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் கூடன்குளம் ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும் என கோரி .அதிமுக இராதாபுரம் ஒன்றிய பொருளாளர் துரைசாமி, செயலாளர் அந்தோனி அமல ராஜா மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேற்று ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர் 
இந்நிலையில் இன்று காலை கூடங்குளம் ஊராட்சி தலைவி வின்சி மணியரசு தலைமையில் ஊர் பொதுமக்கள் கூடங்குளம் பத்ரகாளியம்மன் ஆலயம் அருகே மெயின் ரோட்டில் குடிநீர் ஏற்றிவந்த லாரிகளை மறித்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.









