எதிர்க்கட்சியை பழிவாங்க சிபிஐ- அகிலேஷ்யாதவ் குற்றச்சாட்டு

0
1175
எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
சமாஜ்வாடி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவ், லக்னோவில்செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்க்கக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்களிடையே ஒருவித பயத்தை உண்டாக்கவே, அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.
இந்திய ஜனநாயகத்தில் கடந்த காலத்தில் எந்தவொரு அரசும் இத்தகைய செயலில் ஈடுபட்டதில்லை என்றார்.
70 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் ஏற்கனவே வேலையில் இருப்பவர்களும் வேலையிழந்து வருகின்றனர். இந்தியாவை விட வங்கதேச பொருளாதாரம் கூட சிறந்ததாக உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு தவறான கொள்கைகளால் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பது தெளிவாகிறது எனவும் விமர்சனம் செய்துள்ளார். காஷ்மீர் முழுவதும் அமைதியாக இருப்பதாக மத்திய அரசு கூறும்நிலையில், அங்கு 20 நாட்களாகியும் மக்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here