தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கி இரவு 8 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் வந்தனர். எதிர்பாராத விதமாக கேடிசி நகர் சோதனைச் சாவடியில் இருந்த சாலை தடுப்பில் ( பேரிகாடு) பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
நெல்லை மாநகரைச் சுற்றி போலீசார் தேவையில்லாத இடங்களில் பேரிகார்டு அமைத்து அதை கண்காணிக்காமலும் விட்டுவிடுகின்றனர். இதனால் இத்தகைய விபத்துகள் நிகழ்கின்றன.
எதிர்பாராத விதமாக யாராவது போதையில் மூழ்கி உயிரிழந்தால் அதையே காரணம் காட்டி இந்த தேவையற்ற கொலை முயற்சியை நியாயப்படுத்தி விடுகின்றனர் என பொதுமக்கள் குமுறுகின்றனர்.







