மதுரை மாவட்ட தனிப்
படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு உட்பட்ட வரிச்சூர் ஏரியாவில், மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் ரோந்து சென்றபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை விற்பனைக்கு வைத்திருந்த ராதா கிருஷ்ணன்( 32.) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் சுமார் 80 கிலோ மற்றும் அந்த நபர் பயன் படுத்திய நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, மேற்படி நபரை கைது செய்த னர்.















