மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல்,ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி பருவத்தில் கூட்டுறவு சங்கம் வாயிலாக விதைகளுக்கு பயிர் கடன் வழங்குதல்,உர வினியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன்,கம்பம் ராமகிருஷ்ணன்,தமிழரசி,கோ.தளபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. அனிஸ்சேகர் , துணை ஆட்சியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்..















