.
கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக ராணி தோட்டம் பணிமனையில் ஓட்டுநராக இருப்பவர் கென்னடி. TN74N1841 என்ற எண்ணிட்ட அரசு பேருந்தை ஓட்டி வந்தார்.
அந்த பஸ் மிகவும் பழுதடைந்து இருந்தது. மேலும், இரண்டு மூன்று நாட்களாக சரியாக பிரேக் பிடிக்காமல் போனது. அது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையிலும் ,, தொடர்ந்து அந்தப் பேருந்தை ஓட்டுமாறு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர்.
இதனால் வேதனை அடைந்த ஓட்டுனர் கென்னடி, நேராக பேருந்தை நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டி வந்து பேருந்தை போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்தார்.