கோவை தடாகம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ். இவரது சேவையை கருதி ‘மக்கள் மருத்துவர்’ என்று அழைக்கப்பட்டார். இவரது மகள் சாந்தனாதேவி. இவரும் தந்தையை போல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மேற்கொண்டுவந்தார். இவரை போன்று ‘ஸ்டெர்லைட் படுகொலையை பற்றி “கொளுத்தியது யார்” ஆவணப்படத்தை வெளிக்கொண்டுவந்த ’டியூனோ’ இணையதள பொறுப்பாளர் மேக்மோகனும் மக்களுக்காக இயக்கம் நடத்திவந்தார்.
இவர்கள் இருவரும் கோவையை சுற்றி நடக்கும் கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிவந்தனர். இந்நிலையில், கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்
யானைகள் வழித்தடத்தில் அரசின் அனுமதியின்றி
சட்டவிரோதமாக இயங்கி வந்த செங்கல் சூளைகளை படமெடுத்தபோது இருவரையும் கனிமவளக் கொள்ளையர்கள் கடத்தி சிறைவைத்தனர்.
தகவல் அடிப்படையில் போலீசார் செங்கல் சூளைக்கு சென்று மாலையில் அவர்களை தடாகம் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதேவேளை, செங்கல் சூளையை படம் எடுத்தபோது தடுத்த காவலாளியை அடித்ததாக இவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.