மிகவும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை சிந்தாதிரிபேட்டை ரிச்சி தெருவில் இன்று
மதியம் ஒரு பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் கொல்ல முயன்றது. பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
இதுதொடர்பாக நடந்த விசாரணையில் அந்தப் பெண் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரின் முன்றாவது மனைவி என்று தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














