ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் ஜக்கையன் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சியில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை. இந்த இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தி முறையாக அமல்படுத்த வேண்டும். அதே போன்று எஸ்.சி, எஸ்.டிக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப 20 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும். மனித கழிவுகளை மனிதன் அள்ளுவதை தடுக்கும் வகையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியார் பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.