பெரியகுப்பம் மேட்டுத்தெருவில் மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் பிரியங்கா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் தமிழ்நாடு முதல்வர் விழாவில் அளித்த பணம் வராத கடன் காசோலை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
திருத்தணி கல்லூரியில் நடந்த முதல்வர் விழாவில் கடன் வழங்கவிருப்பதாக தனது குழுவினரை அழைத்ததன் பேரில் சென்றதாகவும், அங்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த காசோலையுடன் வங்கி சென்ற போது முதல்வர் கலந்துகொள்ளும் விழா என்பதற்காக காசோலை வழங்கப்பட்டதாகவும், அதை மகளிர் திட்ட அலுவலர் தமிழரசியிடம் திரும்பக் கொடுத்துவிடுமாறும் வங்கி மேலாளர் கூறியுள்ளார்.
ஏற்ககனவே பட்டினியுடன் அழைத்துச்சென்று விழாவில் மணிக்கணக்கில் அமரவைத்து கடைசியில் செல்லாத காசோலையை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக மகளிர் குழுத்தலைவி தெரிவித்திருப்பது பெரிதும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் பேசிய காணொளி கீழே: