தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு அலுவலக வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதில் இருவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் குற்றவாளிகளின் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து ஜாமீனுக்கு போலீசார் மற்றும் அரசு தரப்பு வக்கீல் சார்பில் கடும் அழுத்தம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.