நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் அக்.17ம்தேதி வரை நீட்டிப்பு

0
499

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார்.

அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு மறுத்ததுடன், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தது.

லண்டனில் உள்ள நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிரவ் மோடியின் காவலை வரும் அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான பணிகள் நடப்பதாகவும் கோர்ட் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here