இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் ஒன்று நீலகிரி மலைப் பகுதியில் விழுந்து எரிந்ததால் அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் உடனடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
பிபின் ராவத் தில் நிலை, மருத்துவ, மீட்பு செயல்பாடு, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இருவரும் கலந்து ஆலோசித்தனர்.
இந்த விபத்து குறித்து விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சிறப்பு மருத்துவக் குழுவை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. மீட்கப்பட்ட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளித்து நிலையில் அது பலனின்றி இறந்தனர். இதனால் விபத்தில் மடிந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆனது.













