மதுரை மாவட்டம் திருமங்கலம் வாகைகுளம் பிரிவின் அருகே உள்ள சூர்யா நகரில் கண்மாய் உடைந்து வீட்டில்குள் மழை நீர் புகுந்துள்ளதால் வெளியே வர முடியாமல் தவித்த ஒரு குடும்பத்தினரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

அக்குடும்பத்தை சேர்ந்த குமரவேல் வயது 78 . மனைவி பாப்பா வயது 72 . மகள் மேரி வயது 32 .மகள் அஸ்விதா வயது 6 . மாமனார் அபேஸ் வயது 52 ஆகியோரை திருமங்கலம் தீயனைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் மற்றும் அதன் குழுவினருடன் விரைந்து சென்று காப்பாற்றி திருமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓப்படைத்தனர்.















