சாத்தான்குளம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்

0
824

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் சாத்தான்குளம், சாஸ்தாவின் நல்லூர், அரசூர் பூச்சிக்காடு, அம்பல சேரி, சொக்கன்குடியிருப்பு, பழங்குளம், ஆசிர்வாதபுரம், உள்ளிட்ட அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளிலும் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கியது.

கலுங்கு விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்குட்பட்ட இரு நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வங்கி தலைவர் இதழாளர் அய்கோ தொடங்கி வைத்தார்.

கோமாநேரி , நெடுங்குளம் ஆகிய இரு இடங்களில் நடந்த இந்த நிகழ்ச்சிகளில் கோமாநேரி ஊராட்சி தலைவர் கலுங்கடி முத்து, நெடுங்குளம் ஊராட்சி தலைவி சகாய எல்பின், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இசக்கிமுத்து, இயக்குனர்கள் ஹைகோர்ட் துரை, அனந்த பெருமாள், அந்தோணி சவரி முத்து, அந்திரேயா, தனிஸ்லாஸ், முருகானந்தி, அஞ்சலகர் பர்ணபாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வங்கி செயலாளர் அகமது, நியாய விலை கடை பணியாளர்கள் பிரின்ஸ், ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

வந்திருந்த குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய், கரும்பு மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here