மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, பனையூர் கிராமத்தில் சபரிமலை சாஸ்தா அய்யனார் கோவில் உள்ளது.
பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 2001ஆம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டு கோவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
தற்போது, பெய்த தொடர் மழையில், கோவிலில் உள்ள திருமண மண்டபம் இடிந்து முற்றிலும் சேதமானது.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டிடத்திலிருந்து இடிந்த பகுதிகளை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
பக்தர் வருகை இல்லாததால் எந்தவித உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..











