மனைவியை கொன்ற கணவர் கைது

0
417


மதுரை எஸ். எஸ். காலனி பகுதியில் உள்ள பாரதியார் 5-வது தெருவில் வசித்து வரும் சிவகுமார் ஓய்வுபெற்ற ரயில்வே சிக்னல் ஆபரேட்டர். இவரது மனைவி மேரி குட்டி. திருமணமாகி 35 வருடங்கள் ஆன நிலையிலும் இருவரும் தனியே வசித்து வந்துள்ளனர். குழந்தைகள் இல்லை.தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்தநிலையில், இன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவகுமார் ,மேரி குட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து, மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் சிவக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here