விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளையாபுரம் ராஜீவ்காந்தி காலனியைச் சேர்ந்த 20 வயது வாலிபர், ஊமச்சிகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பிளஸ்2 மாணவியை கடத்திச் சென்றுள்ளார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து போன் செய்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர் மாணவியை நேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது வாலிபர் திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் இது தொடர்பாக ஊமச்சிகுளம் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக 20 வயது வாலிபரை கைது செய்தனர்.















