மதுரை மாவட்டத்தில், புறநகர் பகுதிகளில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுகிறது .
இந்த நிலையில், மதுரை அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் தனியார் குடோனில் டன் கணக்கில் ரேஷன் அரசிகள் பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் 21 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத
ரேசன் அரிசி கடத்திய பிரபல ரேஷன் கடத்தல் மன்னன் கொரிலா முத்து மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேரை குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, வேறு இடங்களில் ரேசன் அரிசி பதுக்கி வைத்துள்ளார்களா என்பது குறித்து 12 பேரையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.