ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் போலீஸார் பெருங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குளத்திற்குள் இருந்து வெளியே வந்த இரண்டு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் குளத்து கரம்பை மண்ணை திருடி சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து ஏரல் போலீசார் இரண்டு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.அதை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் ஊத்துமலையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காடுவெட்டியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.